சினிமா செய்திகள்
யாழ்

பல இசைகலைஞர்கள் ஒன்றிணையும் திருவிழா

Published On 2022-04-15 09:48 GMT   |   Update On 2022-04-15 09:48 GMT
பல இசைகலைஞர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் யாழ் திருவிழா ஏப்ரல் 14-15ல் நடைபெறுகிறது.
உலகெங்கிலும் உள்ள சுயாதீன கலைஞர்களை ஒன்றிணைத்து, சுதந்திர இசைக்காக தென்னிந்தியாவில் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குகிறது மாஜா. இணையம் வழி மாஜா நடத்தும் 
உலகளாவிய யாழ் திருவிழாவிற்காக 30க்குமேற்பட்ட பிரபல கலைஞர்கள் ஒன்று கூடுகிறார்கள். இவ்விழா ஏப்ரல் 14-15 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இசைகலைஞர்களான சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், லியோன் ஜேம்ஸ், ஷாஷா திருப்பதி, தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழு ஆகியோருடன், தெற்காசிய புலம்பெயர்ந்த கலைஞர்களான முகன் ராவ், ஷான் வின்சென்ட் டி பால் போன்ற கலைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். 

யாழ் திருவிழாவிற்காக, 34 கலைஞர்கள்  ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி இணையத்தில் யூடியூப் மற்றும் விஜய் மியூசிக்கில் திரையிடப்படவுள்ளது. 
Tags:    

Similar News