சினிமா செய்திகள்
செல்வராகவன் - சோனியா அகர்வால்

மன வலியோடு பிரிந்தோம் - சோனியா அகர்வால்

Update: 2022-03-26 10:56 GMT
கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சோனியா அகர்வால் மன வலியோடு பிரிந்தோம் என்று கூறியிருக்கிறார்.
தமிழில் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தொடர்ந்து கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே, வானம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

சோனியா அகர்வாலுக்கும், இயக்குனர் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்து 2006-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2010-ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இத்தனை வருடமும் விவாகரத்து குறித்து கருத்து சொல்லாமல் இருந்த சோனியா அகர்வால் தற்போது முதல் தடவையாக செல்வராகவனை பிரிந்த காரணம் பற்றி பேசி இருக்கிறார்.


சோனியா அகர்வால்

அவர் அளித்துள்ள பேட்டியில், “செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றியபோது அவரது கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. என்னையும் அவருக்கு பிடித்தது. இதனால் காதலிக்க ஆரம்பித்தோம். பின்னர் திருமணமும் செய்து கொண்டோம்.

அதன்பிறகு சில விஷயங்களில் உடன்படாத மனநிலை உள்ளிட்ட சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்தோம். திருமணம் செய்து கொள்ளும்போது மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் விவாகரத்து செய்யும்போது மன வலியோடு பிரிந்தோம்’’ என்றார்.
Tags:    

Similar News