சினிமா செய்திகள்
பிரபு தேவா

போர் வீரராக மாறும் பிரபு தேவா

Published On 2022-02-18 05:41 GMT   |   Update On 2022-02-18 05:41 GMT
நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணித்து கொண்டிருக்கும் பிரபு தேவாவின் அடுத்த படத்திற்கு ஜப்பானிய போர் வீரனின் பெயரை வைத்துள்ளனர்.
இந்திய சினிமாவில் நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணித்து கொண்டிருப்பவர் பிரபு தேவா. இவர் தற்போது ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை', ’மை டியர் பூதம்’ போன்ற பல படங்களில் நடித்துவருகிறார். இவர் கடைசியாக நடித்த ”தேள்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


முசாசி

இந்நிலையில் நடிகர் பிரபு தேவா அடுத்தாக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விடிவி கணேஷ், மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு 'முசாசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜாய் பிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டைமென்ட் நிறுவனத்தின் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார். 


ஜப்பானிய போர்வீரரான முசாசியின் பெயரை இப்படத்திற்கு வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Tags:    

Similar News