சினிமா செய்திகள்
விஷால்

ரசிகர்களை ஏமாற்றிய விஷால்

Update: 2022-01-26 13:39 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்.
விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். 

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இப்படம் இன்று வெளியாகவில்லை.கொரோனா ஊரங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் வீரமே வாகை சூடும் திரைப்படம் வெளியாகவில்லை. இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News