டிக்கிலோனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
ஏஜென்ட் கண்ணாயிரம் பட டீசர்
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசரை நடிகர் ஜீவா மற்றும் நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளனர். நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதன் டிசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Glad to release this amazing teaser of #AgentKannayiram, Starring birthday boy partner @iamsanthanam, Happy Birthday Darling 😍😍😍😘https://t.co/oSCZnD4ral#HBDSanthanam@manojbeedha_dir
A @thisisysr Musical
Prod by @Labrynth_Films@thinkmusicindia@DoneChannel1pic.twitter.com/QiQUr6VEG3
— Arya (@arya_offl) January 21, 2022