சினிமா செய்திகள்
இளையராஜா

கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த இளையராஜா

Published On 2022-01-01 10:20 GMT   |   Update On 2022-01-01 10:20 GMT
புத்தாண்டையொட்டி இசைஞானி இளையராஜா இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார்.  இவருக்கு நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, தான் நலமுடன் இருப்பதாக இளையராஜாவே டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.  33 விநாடிகள் ஓடும் வீடியோவில் காரில் பயணிக்கும் இளையராஜா, ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், இளமை இதோஇதோ, இனிமை இதோஇதோ என்ற பாடலை பாடி தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இளையராஜா

இந்நிலையில் புத்தாண்டையொட்டி இசைஞானி இளையராஜா இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News