சினிமா
நயன்தாரா - ஷாருக்கான்

ஷாருக்கான் - நயன்தாரா படத்தில் இணையும் மேலும் ஒரு நடிகை

Published On 2021-08-17 16:50 GMT   |   Update On 2021-08-17 16:50 GMT
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.


சான்யா மல்ஹோத்ரா

அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மற்றொரு நடிகையாக சான்யா மல்ஹோத்ரா என்பவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அமீர்கான் நடித்த ’தங்கல்’ திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News