சினிமா
எஸ் பி பாலசுப்ரமணியம் - கே ஜே யேசுதாஸ்

கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை - கே.ஜே.யேசுதாஸ் வருத்தம்

Published On 2020-09-26 09:55 GMT   |   Update On 2020-09-26 09:55 GMT
என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று கே.ஜே.யேசுதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் கே ஜே யேசுதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அண்ணா என்று கூப்பிடும் பொழுது ஒரு அம்மா வயற்றில் பிறக்க வில்லை ஆனால் ஒரு கூட பிறந்தவர் போல பழகியவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ் பி பி அவர்களும் சகோதர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்க வில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டு பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார்.

 சங்கராபரணம் என்ற படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாக பாடியிருப்பார் அதை கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்க வில்லை என கூறமாட்டர்கள். இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். சிகரம் படத்தில் பாடிய அகரம் இப்போ சிகரம் ஆச்சு என்ற பாடல் பாலு எனக்கு பரிசாக பாடினேன் என்று கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பா டல்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார்.

  நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான். பாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன் இந்த கொரோனாவால் நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது. நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News