சினிமா
ராணா, மிஹீகா

மிஹீகா தான் எனக்கு பொருத்தமான ஜோடி - நடிகர் ராணா

Published On 2020-07-30 08:31 GMT   |   Update On 2020-07-30 08:31 GMT
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, மிஹீகா தான் தனக்கு பொருத்தமான ஜோடி என தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் 2010-ல் வெளியான லீடர் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராணா டகுபதி. பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்து வருகிறார். 

இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. சமீபத்தில் கொரோனா ஊரடங்கில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்க இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.



இந்த நிலையில் அடுத்த மாதம் 8-ந்தேதி திருமணம் நடக்க இருப்பதை ராணா உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “என் வாழ்க்கையில் மிஹீகா நுழைந்தது நல்ல தருணம். அவர்தான் எனக்கு பொருத்தமான ஜோடி. நாங்கள் சிறந்த தம்பதிகளாக இருப்போம். ஆகஸ்டு 8-ந்தேதி எங்கள் திருமணம் நடக்க உள்ளது. அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கும்” என்றார்.
Tags:    

Similar News