சினிமா

தடய அறுவை சிகிச்சை நிபுணராக களமிறங்கும் அமலா பால்

Published On 2018-12-31 12:45 GMT   |   Update On 2018-12-31 12:45 GMT
அதோ அந்த பறவை போல, ஆடை படத்தை தொடர்ந்து அடுத்ததாக தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலாபால் நடிக்க இருக்கிறார். #AmalaPaul
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல், ‘ஆடை’ படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இந்த லிஸ்டில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. 

அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் இந்த நாயகியை மையப்படுத்திய படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கிறார். இந்திய சினிமாவில் ஒரு நாயகி கதாபாத்திரம் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல்  தடயவியல் புலனாய்வு திரில்லர் படம் இது தான். ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளை சுற்றி நடக்கும் கதை.

மேலும், இந்த படம் கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் டாக்டர் பி. உமாதத்தன் அவர்கள் கையாண்ட ஒரு உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டது. அனூப் பணிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை ஆகிய இருவரும் அவருடன் 6 மாதங்கள் ஆழமாக கலந்துரையாடி கதையை எழுதியிருக்கின்றனர். தடய அறுவை மருத்துவத்தை பற்றி அறிந்து கொள்ள பல மருத்துவ கல்லூரிகளையும் கூட இந்த இருவரும் பார்வையிட்டனர்.



சுவாரஸ்யமாக, 'ராட்சசன்' படத்தின் படத்தொகுப்பாளர், கலை இயக்குனர், சண்டைப்பயிற்சியாளர் என ஏறக்குறைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் பணியாற்ற பிரபல நடிகர்கள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏ.ஜே. பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2019ல் தொடங்குகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மொத்த படமும் படமாக்கப்பட இருக்கிறது. #Amalapaul
Tags:    

Similar News