சினிமா

குரூப் டான்சர் உடலை கொண்டு வர அஜித் உதவி

Published On 2018-11-10 11:00 GMT   |   Update On 2018-11-10 11:00 GMT
விஸ்வாசம் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த குரூப் டான்சர் உடலை கொண்டு தமிழகம் கொண்டு வர நடிகர் அஜித் உதவி செய்ததாக டான்ஸ் யூனியனின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AjithKumar #Viswasam
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இப்படம், அடுத்த ஆண்டு (2019) பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. தற்போது இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு பாடலுக்கான சில காட்சிகளை மட்டும் படமாக்கி வந்தனர். அஜித்துடன் குரூப் டான்ஸர்கள் நடனமாடும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சரவணன் என்ற குரூப் டான்ஸர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், சரவணன் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே இறந்தார். சரவணன் உயிரிழந்தது தெரிந்தவுடன், பிரேதப் பரிசோதனை முடியும்வரை மருத்துவமனையிலே இருந்திருக்கிறார் அஜித். இதுகுறித்து டான்ஸ் யூனியனின் பொருளாளர் செந்தில்குமார் கூறும்போது, “எங்கள் சங்கத்தின் தலைவர் படப்பிடிப்பில் இருப்பதால், இதை நான் பேசுகிறேன். ஷூட்டிங் சென்ற இடத்தில் சரவணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.



அஜித் சார் தான் தனது சொந்த செலவில் அவரது பிரேதத்தை சென்னைக்கு எடுத்து வர உதவினார். அவர் மட்டும் இல்லாவிட்டால், உடல் வந்து சேர 3 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்றார். #AjithKumar #Viswasam

Tags:    

Similar News