சினிமா

ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்

Published On 2018-10-23 12:19 GMT   |   Update On 2018-10-23 12:19 GMT
தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ‘சாஹூ’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார் பிரபாஸ். #Prabhas
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான 'சாஹூ' திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் "சாஹூ"  மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது. 

இப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரதா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் நடித்துள்ளனர்.



இயக்குனர் சுஜீத் இப்படத்தை இயக்க, வம்சி, பிரமோத், விக்ரம் அவர்களின் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
Tags:    

Similar News