சினிமா

போராட்ட வீரரின் வாழ்க்கை கதையை படமாக்கும் அறம் பட இயக்குனர்

Published On 2018-10-09 11:39 GMT   |   Update On 2018-10-09 11:39 GMT
நயன்தாராவை வைத்து ‘அறம்’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் கோபி நயினார், அடுத்ததாக போராட்ட வீரரின் வாழ்க்கை கதையை படமாக்க இருக்கிறார். #Aramm
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று வரிசையாக தமிழில் வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. இந்த வரிசையில் அறம் இயக்குனர் கோபி நயினார் பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையை படமாக்க உள்ளார்.

வட இந்தியாவைச் சேர்ந்த பிர்சா முண்டா, நாட்டின் சுதந்திரத்துக்காகவும், பழங்குடி இன மக்களுக்காகவும் போராடி இளம் வயதிலேயே உயிர் நீத்தவர்.

இவரது வாழ்க்கை வரலாற்றை இயக்கஇருப்பது குறித்து பேசிய கோபி நயினார், ‘ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்ட பிர்ஸா முண்டா, பற்றிய கதையை எழுதி முடித்துவிட்டேன்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதைக்காக கடந்த 2 ஆண்டுகளாய் பல்வேறு ஆவணங்களை திரட்டி இருக்கிறேன். இது ஒரு பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

உச்ச நட்சத்திரம் ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News