சினிமா

கல்விக்கு கைகொடுக்கும் ஜி.வி.பிரகாஷ் - தமிழ் சொந்தங்களுக்கு வேண்டுகோள்

Published On 2018-09-09 10:28 GMT   |   Update On 2018-09-09 10:28 GMT
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் கல்விக்கு கைகொடுக்கும் விதமாக அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் சம்பளத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். #GVPrakashKumar
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருக்கிறார். அவ்வப்போது சமூக கருத்துக்களையும் பகிர்ந்து வரும் ஜி.வி. இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது,

கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவை. அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது. அதற்கு நாம் இப்போது முயற்சி எடுக்க வேண்டும். ஏற்கனவே கல்வி என்பது வியாபரமாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவச கல்வி என்பதே சாத்தியம் இல்லாமல் போய்விடும். உலகஅளவில் சாதித்த பல தமிழர்கள், அரசு பள்ளிகளில் படித்தவர்களே. 

தற்போது 890 அரசுப் பள்ளிகள் மூடும்நிலையில் உள்ளது. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான அளவிலான மாணவர்களே உள்ளனர். நகர்ப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இதில் எனது சிறிய முயற்சியாக சென்னையில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. சொல்லித் தரும் ஒரு தனியார் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னை இந்த நல்முயற்சிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி, இவ்வாறு கூறினார். #GVPrakashKumar

Tags:    

Similar News