சினிமா

இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு

Published On 2018-08-29 09:50 GMT   |   Update On 2018-08-29 09:50 GMT
இந்து கடவுள்கள் மீது அவதூறாக பேசியதாக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #PrakashRaj
நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு 4-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் கிரண் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்து உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் அவதூறாக பேசி வருகிறார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும் அவர் இந்து மதத்தையும், அதன் கடவுள் வழிபாடுகளையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

இந்துக்கள் கடவுளாக போற்றி வணங்கும் பசுவையும் அவர் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வருகிறார். அவரின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் கோடிக் கணக்கான இந்துக்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இந்துக்களின் மனங்களை காயப்படுத்தும் வகையில் பேசி வரும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் வக்கீல் கிரண் கூறி உள்ளார்.

இந்த மனுவை பெங்களூரு 4-வது குற்றவியல் மாஜிஸ் திரேட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இது குறித்து பதில் அளிக்க போலீசாருக்கும், பிரகாஷ்ராஜூக்கும் நோட்டீசு அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 25-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News