சினிமா

குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்

Published On 2018-08-11 11:20 GMT   |   Update On 2018-08-11 11:20 GMT
எமி ஜாக்சன் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள 2.0 படம் நவம்பரில் ரிலீசாக இருக்கும் நிலையில், எமி ஜாக்சன் வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ மற்றும் குளியலறை புகைப்படம் வைரலாகி வருகிறது. #AmyJackson
மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான எமி ஜாக்சன் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள 2.0 படத்தை பெரிதாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். எமி ஜாக்சன் உடற்கட்டுக்கு பெயர் பெற்றவர். அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தம்பல்ஸ் வைத்து அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. உடலினை உறுதி செய்யவேண்டும் என ஜிம்முக்கு போகும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பிட்னஸ் டிரெயினரான பிராட்லி சைமண்ட்சுடன் பயிற்சியைத் துவங்கி விட்டதாக எமி ஜாக்சன் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் உள்ள தி மே ஃபேர் நட்சத்திர விடுதியின் உடற்பயிற்சி கூடத்தில் அவர் உடற்பயிற்சி செய்கிறார். மேலும் அதே விடுதியில் பாத் டப்பில் குளிக்கும்படியான புகைப்படம் ஒன்றையும் எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இரண்டுமே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #AmyJackson

Tags:    

Similar News