சினிமா

தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே

Published On 2018-08-01 12:43 GMT   |   Update On 2018-08-01 12:43 GMT
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி என்று கூறியிருக்கிறார். #RadhikaApte
இந்தி நடிகை ராதிகா ஆப்தே சமூக அவலங்களுக்கு எதிராக எப்போதுமே தைரியமாக தன்னுடைய குரலை உயர்த்தி வருபவர்.

இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ராதிகாவுக்கு அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான இணைய தொடர் ஸ்கேர்டு கேம்ஸ் நல்ல வரவேற்பை கொடுத்தது.

பெண்கள் சுகாதாரம் தொடர்பாகப் பேசியுள்ள ராதிகா ஆப்தே ‘இன்னும் நம் நாட்டில் மாதவிடாய் என்பது மிகப்பெரிய மூட நம்பிக்கைகள் பிண்ணப்பட்ட வி‌ஷயமாக உள்ளது. மாதவிடாய் காலங்களில் எப்படி சுகாதாரமாக இருக்க வேண்டும் என கற்பிக்க வேண்டும்.



நம் நாட்டு மக்கள் மாதவிடாய் மற்றும் பெண்களின் சுகாதாரம் குறித்துப் பேச தயக்கம் காட்டுகின்றனர். ஒரே நாளில் மாற்றம் நிகழாது. படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்களின் சுகாதாரம் மற்றும் மாதவிடாய் பற்றி தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி’ என்று கூறி இருக்கிறார்.
Tags:    

Similar News