சினிமா

பாட மட்டும் செய்யல, ஆடவும் செய்திருக்கிறார் சிம்பு

Published On 2018-07-22 11:45 GMT   |   Update On 2018-07-22 11:45 GMT
இசையமைப்பாளர், நடிகர் என பிசியாக இருந்து வரும் நடிகர் சிம்பு, அடுத்ததாக ஒரு ஆல்பத்திற்கு பாடிவது மட்டுமில்லாமல் ஆடவும் செய்திருக்கிறார். #Simbu #STR
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிம்பு நடிப்பை தாண்டி பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல அவதாரம் எடுத்து வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், ‘பெரியார் குத்து...’ என்ற பாடலை பாடியுள்ளார்.



இந்த பெரியார் குத்து பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசைமைக்க மதன் கார்க்கி வரிகள் அமைத்துள்ளார். தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு இந்த ஆல்பத்தை தயாரிக்கிறார்கள். இதில் சிம்பு முதலில் பாட மட்டும்தான் செய்திருக்கிறார் என்று செய்தி வெளியானது. தற்போது இந்த பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார் சிம்பு. விரைவில் இந்தப் பாடலை வெளியிட இருக்கிறார்கள்.
Tags:    

Similar News