சினிமா

சீமராஜா ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2018-07-11 15:38 GMT   |   Update On 2018-07-11 15:38 GMT
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். #Seemaraja #Sivakarthikeyan
பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், சமந்தா மற்றும் சூரியுடன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவுக்கு வந்ததாக இயக்குநர் பொன்ராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது படத்தை செப்டம்பர் மாதம் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். 

படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 



24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha
Tags:    

Similar News