சினிமா

சிம்பு படத்தின் கதாநாயகி இவரா?

Published On 2018-07-04 17:26 GMT   |   Update On 2018-07-04 17:26 GMT
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. #STR #Simbu #VP9
சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். இதில் இவருடன் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறித்தார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். 2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் நடிகைகள், பின்னணி கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் தற்போது ‘சர்கார்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் ‘சண்டக்கோழி 2’, ‘சாமி ஸ்கொயர்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.



சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திற்கு ‘அதிரடி’ என்று தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. #STR #Simbu #VP9
Tags:    

Similar News