சினிமா

சினிமா மக்கள் தொடர்பாளர் சங்கத் தேர்தல் - தலைவரானார் விஜயமுரளி

Published On 2018-06-24 11:40 GMT   |   Update On 2018-06-24 14:04 GMT
தென்னிந்திய சினிமா திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத் தேர்தலில் விஜயமுரளி வெற்றி பெற்றார். #PROElection #VijayaMurali
சினிமாவுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவர்கள் பி.ஆர்.ஓ.க்கள் எனப்படும் மக்கள் தொடர்பாளர்கள். இவர்களது தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் செயலாளராக பெருதுளசி பழனிவேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக இருக்கும் டைமண்ட் பாபுவும், பொருளாளராக இருக்கும் விஜய முரளியும் போட்டியிட்டனர். இதில் விஜய முரளிக்கு விட்டுக்கொடுத்து டைமண்ட் பாபு வாபஸ் பெற்றார். அதனை தொடர்ந்து விஜய முரளி ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.



மேலும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்: 

துணை தலைவர்: இராமானுஜம் மற்றும் கோவிந்தராஜ்

இணை செயலாளர் : குமரேசன் மற்றும் ஆனந்த்

பொருளாளர்: யுவராஜ் 

செயற்குழு உறுப்பினர்களாக வி. பி. மணி, கிளாமர் சத்யா, மதுரை செல்வம், நிகில்முருகன், சரவணன், சாவித்திரி, ஆறுமுகம், சங்கர், செல்வகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். யூனியன் தேர்தலை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். கிரிதரன் நடத்தி கொடுத்தார். #PROElection #VijayaMurali

Tags:    

Similar News