சினிமா

காரை ஏலத்தில் விட்ட ஜேம்ஸ்பாண்ட் நடிகர்

Published On 2018-04-22 06:35 GMT   |   Update On 2018-04-22 06:35 GMT
ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரேக், தான் பயன்படுத்தி வந்த காரை அறக்கட்டளைக்கு கொடுப்பதற்காக ஏலத்தில் விட்டிருக்கிறார். #JamesBond #DanielCraig
ஜேம்ஸ்பாண்ட் சினிமா படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர் டேனியல்கிரேக். இவர் குவாண்டம் ஆப் கோலார்ஸ், கேசினோ ராயல்ஸ், ஸ்கையால், ஸ்பெக்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஆஸ்டன் மார்டின் என்ற காரை பயன்படுத்தி வந்தார். இது அவருடைய சினிமா கதாபாத்திரமான 007 என்ற எண் கொண்டது. இந்த கார் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

நீல நிறம் கொண்ட அந்தக்கார் நியூயார்க்கில் கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் போது நடிகர் டேனியல் கிரேக் அவரது மனைவி ரேசல் வெய்ஸ் ஆகியோர் கிறிஸ்டி மையம் சென்றிருந்தனர்.

ஏலத்தில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர். இறுதியில் அந்த கார் ரூ.3 கோடிக்கு (4,68,500 டாலர்) விற்பனை ஆனது. ஆனால் இந்த காரை ஏலத்தில் வாங்கியவரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.



இந்த காரை டேனியல் கிரேக் கடந்த 2014-ம் ஆண்டில் ஆஸ்டின் மார்டின் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். அப்போது அந்த நிறுவனம் தனது 100-வது ஆண்டுவிழாவை கொண்டாடியது. இக்கார்கள் மணிக்கு 295 கி.மீ வேகத்துடன் அதிவிரைவாக செல்லக் கூடியது. அலுமினியத்தால் மிக குறைந்த எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கார் விற்பனை மூலம் கிடைத்த ரூ.3 கோடியை டேனியல் கிரேக் ஒரு அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினார். அது வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்த பயன்படும்.
Tags:    

Similar News