சினிமா

தென் மாநில படங்களில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது - ரெஜினா

Published On 2018-04-21 11:14 GMT   |   Update On 2018-04-21 11:14 GMT
இந்திய அளவில் திரைப்பட துறையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், தென் மாநில படங்களில் தான் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று ரெஜினா கூறியிருக்கிறார். #ReginaCassandra
தமிழ், தெலுங்கு பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ரெஜினா. இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது தமிழை விட தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ராம்சரண் - சமந்தா நடிப்பில் திரைக்கு வந்த ‘ரங்கஸ்தலம்’ ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் நடித்துள்ள ராம்சரண் பற்றி கூறிய ரெஜினா...



“‘ரங்கஸ்தலம்’ படத்தின் ஹீரோ ராம்சரண் நடிப்பு எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. காது கேளாத மெக்கானிக் பாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். எனக்கும் இது போன்ற வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இப்போது தென் மாநில திரைத்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இது வரவேற்கதக்கது. இந்திய அளவில் திரைப்பட துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும், தென் மாநில படங்களில் தான் அதிக அளவில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது” என்றார். #ReginaCassandra

Tags:    

Similar News