சினிமா

காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

Published On 2018-04-20 12:58 GMT   |   Update On 2018-04-20 12:58 GMT
காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். #AliaBhatt
காஷ்மீர் மாநிலத்தில், 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைவர்கள், கலைத்துறையினர் உள்பட பல்வேறு அமைப்பினர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகை அலியாபட் இதுபற்றி கூறி இருப்பதாவது...

“இந்தி பட உலகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டு மக்களும் கோபமாக இருக்கிறார்கள். இது வெட்கப்பட வேண்டிய வி‌ஷயம். இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதேயென்று, ஒரு பெண்ணாக, மனிதப் பிறவியாக வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.



காஷ்மீர் சிறுமி வழக்கு பற்றிய செய்திகளை படிப்பதை நிறுத்திவிட்டேன். முதல் இரண்டு நாட்கள் அதுபற்றிய செய்திகள் அனைத்தையும் படித்தேன். அதை தொடர்ந்து படித்தால் வேதனையும், கோபமும் தான் அதிகரிக்கிறது. இதனால் அந்த செய்தியை படிப்பதை நிறுத்திவிட்டேன்.

சிறுமி வழக்கில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கக்கூடாது. இந்த சம்பவத்துக்கு அனைவரும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்றார். #AliaBhatt
Tags:    

Similar News