சினிமா

நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன் - நிவேதா பெத்துராஜ்

Published On 2018-04-15 08:46 GMT   |   Update On 2018-04-15 08:46 GMT
சிறுவயதில் நிறையே பேர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுகிறார்கள் என்னைப்போல் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியிருக்கிறார். #NivethaPethuraj #JusticeForAshifa
பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் வழக்கு இந்தியாவைக் கதி கலங்க வைத்துள்ளது. இதற்கு பிரபல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதில், நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதில் ஒரு சில பிரச்சனைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு. ஆண்களும், பெண்களும், சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பார்கள். நானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன். 5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி அம்மா, அப்பாவிடம் எப்படி சொல்லுவேன். எனக்கு அப்போது என்ன நடந்தது கூட எனக்கு தெரியாது. 



பாலியல் தொல்லைகள் கொடுப்பது எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. நமக்கு தெரிந்த உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகத்தான் நடக்கிறது. எனவே எல்லா பெற்றோர்களும் தயவு செய்து பொறுப்புடன் இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு யார் எப்படி பேசினால் தப்பு?, எப்படி தொட்டால் தப்பு? என்று 2 வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்கு பள்ளியில் என்ன நடக்கிறது. டியூசனில் என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியாது. எனவே பாதுகாப்பு குறித்து அதிகம் சொல்லிக் கொடுங்கள். 

நாம் போலீசை நம்பியே இருக்க முடியாது. அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் குழுவாக இணைந்து உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். தவறு நடந்தால் தட்டி கேளுங்கள். தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரை பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்க தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. இதனை அழித்தால் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம்’ என்றார்.


Tags:    

Similar News