சினிமா

அமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் மெர்குரி

Published On 2018-04-10 09:09 GMT   |   Update On 2018-04-10 09:09 GMT
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, நடிப்பில் வசனங்களே இல்லாமல் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `மெர்குரி' அமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. #Mercury #Prabhudeva
ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `மெர்குரி'.

பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் பிரபுதேவா வில்லனாக நடித்திருக்கிறார். வசனங்களே இல்லாமல் பின்னணி இசையின் மூலம் உருவாகி இருக்கும் இந்த படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது.  

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சுமார் 30 வருடங்களுக்கு பிறகு இந்திய சினிமாவில் உருவாகியிருக்கும் சைலண்ட் படம் மெர்குரி என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த படம் திரைக்கு வர தயாராக இருந்தது. ஆனால், திரைப்பட தயாரிப்பாளர்களின் ஸ்டிரைக் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இந்த நிலையில் வருகிற 12-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் ‘மெர்க்குரி’ படம் பிரிமியர் ஷோவாக திரையிடப்படுகிறது. #Mercury #Prabhudeva
Tags:    

Similar News