சினிமா

தேசிய அளவில் வெற்றி பெற்ற சிறுவர்களுடன் விவேக், தேவயானி

Published On 2018-03-06 16:56 GMT   |   Update On 2018-03-06 16:56 GMT
நடிகர் விவேக்கும், நடிகை தேவயானியும் ‘எழுமின்’ படத்தின் மூலம் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த ‘உரு’ படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

விஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள்.



இந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைப்படம் எழுமின்.



ஐந்து சிறுவர்களும் படத்தில் இடம்பெற்ற கடுமையான சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News