சினிமா

நிவேதா பெத்துராஜ்ஜின் திடீர் முடிவு - வருத்தத்தில் ரசிகர்கள்

Published On 2018-03-06 13:54 GMT   |   Update On 2018-03-06 13:54 GMT
ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ் எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. இதில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நிவேதா நடித்துள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் நிவேதா விண்வெளி பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இப்படத்தை தவிர விஜய் ஆண்டனியுடன் ‘திமிரு புடிச்சவன்’ படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’, எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.



இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இயங்கி வந்தார். அவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். இதில் ஏராளமான புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். இந்நிலையில், சில தவறான மெசேஜ்களினால் மனம் பாதிக்கப்பட்ட நிவேதா, திடீரென்று தனது டுவிட்டர் கணக்கை ரத்து செய்து விலகிவிட்டார். இது அவரது ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இனி இன்ஸ்டாகிராமில் மட்டுமே ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News