சினிமா

அரசியலுக்கு நானும் வருவேன் - சிம்பு அதிரடி

Published On 2018-02-24 15:27 GMT   |   Update On 2018-02-24 15:27 GMT
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசம் செய்து வரும் நிலையில், நடிகர் சிம்புவும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருக்கிறார். #STR
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு நானும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து சிம்பு கூறும்போது, ‘தமிழக மக்களுக்கு பிரச்சனை என அனைவரும் ஒன்று சேரும்போது நானும் அரசியலுக்கு வருவேன். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ரஜினி, கமல் அளவிற்கு நான் இல்லை. நான் ஒரு சாதாரண நடிகன் தான். மணிரத்னம் படப்பிடிப்புக்கு வந்து தயாரிப்பாளர் சங்கத்தினர் இடையூறு செய்கின்றனர். எனக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் விஷால் மீது குறை சொல்ல முடியாது’ என்றார்.

மணிரத்னம் இயக்கி வரும் படத்தில் சிம்புவுடன், விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
Tags:    

Similar News