சினிமா

சிம்புவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

Published On 2018-02-08 07:26 GMT   |   Update On 2018-02-08 07:26 GMT
சிம்பு நடித்த படமும், சிவகார்த்திகேயன் நடித்த படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருப்பதால், ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.

அதுபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ரெமொ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அனிருத் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.



இவ்விரு படங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் வெளியாக இருக்கிறது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் இவ்விரு படங்களை ரிலீஸ் செய்கிறார்கள். 

இது செய்தி சிம்பு ரசிகர்களையும், சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News