சினிமா

பிரபல கன்னட நடிகர் காசிநாத் உடல் நலக்குறைவால் காலமானார்

Published On 2018-01-19 03:10 GMT   |   Update On 2018-01-19 03:10 GMT
பிரபல கன்னட நடிகர் காசிநாத் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் நேற்று காலமானார். இவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் காசிநாத் (வயது 67). இவர் சுமார் 43 கன்னட திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். பல்வேறு படங்களையும் தயாரித்து இருக்கிறார். இவர் பெங்களூரு ஜெயநகரில் வசித்து வந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். 

இந்தநிலையில் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து அவர் மரணம் அடைந்தார்.



நடிகர் காசிநாத் மறைவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மாலை காசிநாத் உடல் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News