சினிமா

தமிழ் சினிமாவில் என் வேலைகளில் மூக்கை நுழைக்காத ஒரே நடிகர் அஜித் - கே.எஸ்.ரவிக்குமார்

Published On 2018-01-10 05:23 GMT   |   Update On 2018-01-10 06:02 GMT
தமிழ் சினிமாவில் என் வேலைகளில் மூக்கை நுழைக்காத ஒரே நடிகர் அஜித் குமார் தான் என்று பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் தற்போது தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா - நயன்தாராவை வைத்து ஜெய் சிம்ஹா படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் சங்க்ராந்தியை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. 

இதில் கே.எஸ்.ரவிக்குமார் பேசும் போது,

பாலையாவை வைத்து படம் இயக்குகிறீர்களா? அவர் ரொம்ப கோவக்காரர், அவரை வைத்து எப்படி படம் இயக்குவீர்கள் என்று தமிழ்நாட்டில் கேட்டனர். ஆனால் படத்தின் கதை குறித்து பேசும் போதும் சரி, படப்பிடிப்பின் போதும் பாலையாவிடம் நான் கோபத்தை பார்க்கவே இல்லை. மாறாக நான் தான் படப்பிடிப்பில் அடிக்கடி கோபப்பட்டு கொண்டிருந்தேன். இதுவரை நான் 46 முதல் 47 படங்களை இயக்கியிருக்கிறேன். 



அனைத்து நடிகர்களுமே கதை, காட்சிகள், படப்பிடிப்பு என மாற்றங்களை கொண்டு வர விரும்புவார்கள். அதை இப்படி பண்ணலாமா? இதை அப்படி பண்ணலாமா? டயலாக்களை இப்படி மாற்றலாமே? என நிறைய கேட்பார்கள். ஆனால் நான் அதை தவறு என்று சொல்லவில்லை. எதையாவது புதுமையாக, அவர்களை நல்ல விதமாக காட்டுவதற்காக அப்படி கேட்பதில் தவறு இல்லை. 

ஆனால் இந்த ஷாட் எதற்கு? இது டயாலாக்கை மாற்றலாமா? என எதிலுமே இரண்டு நடிகர்கள் மட்டும் எனது விஷயத்தில் தலையிட்டதே இல்லை. அவர்களில் ஒருவர் அஜித் குமார், மற்றொருவர் பாலையா என்றார். 



கே.எஸ்.ரவிக்குமார், அஜித்தை வைத்து `வில்லன்', `வரலாறு' படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அஜீத் குறித்து நடிகர், நடிகைகள் பலரும் பாராட்டி வரும் நிலையில், பல வெற்றிப் படங்களை கொடுத்த முன்னணி இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரும் அஜித்தை புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News