சினிமா

சர்வதேச பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படம்

Published On 2017-11-21 09:35 GMT   |   Update On 2017-11-21 09:35 GMT
சர்வதேச பட விழாவில் ‘மனுசங்கடா’ என்ற தமிழ் படம் போட்டியிடுகிறது.
கோவா தலைநகரான பனாஜியில், 48-வது சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. பாரீசில் உள்ள சர்வதேச திரைப்படம் மற்றும் டெலிவிஷன் அமைப்புடன் இந்திய திரைப்பட கழகம் இணைந்து இந்த படவிழாவை நடத்துகிறது. இதில் திரையிடுவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தயாரான படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய படங்களுக்கான போட்டி பிரிவில் திரையிடுவதற்காக, ‘மனுசங்கடா’ என்ற தமிழ் படம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதனுடன், ‘க்‌ஷிடிஜ்-ஏ ஹொரிசான்’ என்ற மராத்தி படம், ‘பூர்ணா’ என்ற இந்தி படம், ‘ரெயில்வே சில்ட்ரன்’ என்ற கன்னட படம், ‘டேக் ஆப்’ என்ற மலையாள படம் ஆகிய படங்களும் போட்டி பிரிவில் திரையிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி, பிரான்ஸ், ஜார்ஜியா, தைவான் ஆகிய நாடுகளில் தயாரான படங்களும் இந்த படவிழாவில் திரையிடப்படுகின்றன. சிறந்த படத்துக்கு, யுனஸ்கோ காந்தி பதக்கம் வழங்கப்படும்.

Tags:    

Similar News