சினிமா

மஞ்சு வாரியர் இடத்தை பிடித்த நயன்தாரா

Published On 2017-09-17 12:19 GMT   |   Update On 2017-09-17 12:19 GMT
நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படத்தில் மஞ்சு வாரியர் பதிலாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சங்கர் தயாரித்த ‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து சமீபத்தில் ‘குற்றம் 23’ படத்தை இயக்கினார். இதில் அருண் விஜய் நாயகனாகவும், மகிமா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு அதிக வசூலை வாங்கிக் கொடுத்தது.

இவர் அடுத்ததாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை இயக்க இருக்கிறார். இதில் மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது சொந்த பிரச்சினை காரணமாக இந்தப் படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

சமீபகாலமாக நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். ஆதலால், இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News