சினிமா

முன்னாள் தணிக்கை அதிகாரி தயாரித்த படத்துக்கு ‘கட்’ எதுவும் இல்லை

Published On 2017-09-15 10:00 GMT   |   Update On 2017-09-15 10:00 GMT
முன்னாள் தணிக்கை அதிகாரி பக்லஜ் நிகாலனி தயாரித்திருக்கும் படத்திற்கு, தணிக்கை குழுவினர் எந்த கட்டும் கொடுக்கவில்லை.
ராய் லட்சுமி இந்தியில் நடித்துள்ள படம் ‘ஜூலி-2’. இதில் மிகவும் கவர்ச்சியாக ராய்லட்சுமி உடை அணிந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு பல்வேறு விமர்சனங்களும் வந்தன.

இந்த படத்தில் நெருக்கமான காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், ‘ஜூலி-2’ தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இதற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இந்த படத்தின் எந்த காட்சிக்கும் ‘கட்’ கொடுக்கவில்லை. வசனம் உள்பட எதையும் நீக்கச்சொல்லவில்லை.

தீபக் சிவதாஷினி இயக்கியுள்ள இந்த படத்தை சென்சார் போர்டு முன்னாள் தணிக்கை அதிகாரி பக்லஜ் நிகாலனி, விஜய் நாயர் ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள்.

சாதாரண படங்களையே துருவித் துருவி பார்க்கும் சென்சார்போர்டு அதிகாரிகள் முழு கவர்ச்சியுள்ள இந்த படத்தின் எந்த காட்சியையும் கண்டு கொள்ளவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள இந்த படத்தின் தயாரிப்பாளரும், முன்னாள் தணிக்கை அதிகாரியுமான பக்லஜ் நிகாலனி, “இந்த படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கும் என்று நினைத்தேன். அது நடந்துள்ளது. எந்த ‘கட்’டும் கொடுக்கவில்லை. இது வயது வந்தவர்கள் மட்டும் பார்க்ககூடிய படம். நிர்வாண காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ கிடையாது. சென்சார்போர்டு தங்கள் பணியை சரியாக செய்திருக்கிறார்கள்” என்று பாராட்டியுள்ளார்.
Tags:    

Similar News