சினிமா

மீண்டும் லாரன்ஸுடன் இணையும் பிரபல நடிகை

Published On 2017-09-05 17:39 GMT   |   Update On 2017-09-05 17:39 GMT
ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை, நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
நடன இயக்குனராய் திரையுலகில் அறிமுகமான ராகவா லாரன்ஸ், பின்னர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ போன்ற படங்கள் சமீபத்தில் வெளியானது. தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ். இந்தப் புதிய படத்தை இவரே நடித்து, இயக்கவிருக்கிறார்.

மேலும் இந்தப் படம் ‘முனி’ பாகங்களின் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. திகில் காமெடி வரிசையில் வெளியான ‘முனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காஞ்சனா (முனி 2), காஞ்சனா 2 (முனி 3) ஆகிய அதன் முந்தைய பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடை நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘முனி 3’ படத்தின் இறுதியிலேயே ‘முனி 4’ விரைவில் என லாரன்ஸ் அறிவித்திருந்தார்.

தற்போது காஞ்சனா 3 (முனி 4) படம் உருவாக இருப்பது உறுதியான நிலையில், இப்படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக முனி முதல் பாகத்தில் ஜோடியாக நடித்த வேதிகா, இந்த படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் மூலம் மீண்டும் லாரன்ஸ்க்கு ஜோடியாக இணைய இருக்கிறார். இதுபோல் மற்ற பாகங்களில் நடித்த நடிகைகளும் இப்படத்தில் இணையலாம் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News