சினிமா

`கோகோ'-வான நயன்தாரா: `கோகோ'ன்னா என்ன?

Published On 2017-08-25 12:30 GMT   |   Update On 2017-08-25 12:30 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா `கோகோ'-வாக மாறியிருக்கிறாராம். அப்படியென்றால் என்னவென்பதை பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

நயன்தாரா தற்போது `அறம்', `கொலையுதிர் காலம்', `இமைக்கா நொடிகள்', உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக `வேலைக்காரன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.



இந்த படம் குறித்த அறிவிப்பு அடங்கிய வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார். அதில் படத்தின் பெயர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திற்கு `கோகோ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது `கோலமாவு கோகிலா' என்பதை சுருக்கி `கோகோ' என்று வைத்துள்ளனர்.

`கோகோ' படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மல் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர். சண்டைக் கலைஞராக மகேஷும், கலை இயக்குநராக அமரனும், ஆடை வடிவமைப்பாளராக அனுவர்தனும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News