சினிமா

`அபோகலிப்டா' பாணியில் உருவாகும் தமிழ் படம்

Published On 2017-07-27 09:20 GMT   |   Update On 2017-07-27 09:20 GMT
`அபோகலிப்டா' பாணியில் தமிழில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. அந்த படத்தை ஹரி கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார்.
செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் `ஆறாம் வேற்றுமை'. இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கோபிகா என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் இயக்குனர் ஹரி கிருஷ்ணாவிடம் பேசுகையில், இந்தப்படம் இன்றைய காலகட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம். ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் `ஆறாம் வேற்றுமை' என பெயர் வைத்தோம். தங்களுக்கு என்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம்.

ஓர் இடம், ஓர் இனம், ஓர் வாழ்க்கை என வாழத் தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ஆறாம் வேற்றுமை..
மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் தான் இது. ஆறு அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான்... நாகரிக வாழ்க்கையை வாழ்கிறான்.



அதே ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் காட்டுவாசிகளாகவும் வாழ்கிறான். இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் இல்லாத காட்டுப் பகுதியை தேடிப்பிடித்தோம். பல கிலோ மீட்டர்கள் நடந்தே போக வேண்டி இருந்தது. எல்லோருமே எங்களது முயற்சியையும் கதை பற்றிய நம்பிக்கையையும் மனதில் கொண்டு எல்லா சிரமங்களையும் பொருத்துக் கொண்டார்கள்.

இந்த படத்தைப் ஸ்ரீ முத்தமிழ் லஷ்மி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.பாலசந்தர் வெளியிடுகிறார். முழு படப்பிடிப்பும் தர்மபுரி, சேலம், அரூர், அதிராம்பள்ளி போன்ற இடங்களில் உள்ள காடுகளில் நடைபெற்றுள்ளது.
 
இந்த படத்திற்கு `ரேணிகுண்டா' பட புகழ் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருக்கிறார்.
Tags:    

Similar News