சினிமா

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் `ஒரு குப்பை கதை’

Published On 2017-07-15 07:08 GMT   |   Update On 2017-07-15 07:08 GMT
அடித்தட்டு மக்களின் பிரச்சனையைப் பேசும் 'ஒரு குப்பை கதை'என்ற படத்தினை பார்த்த உதயநிதி ஸ்டாலின் ,படம் தனக்கு பிடித்ததாகவும் தானே வெளியிடுவதாகவும் சொல்ல தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும் படம்  `ஒரு குப்பை கதை’, ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

முதல் முறையாக ஒரு குப்பை கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் நடன இயக்குநர் தினேஷ் . நல்ல கதைக்கு `ஒரு குப்பை கதை’ எனப் பெயரிட்டு களமிறங்கியுள்ளனர் . ஆரம்பத்தில் என்ன குப்பை கதையா? என முகம் சுழித்தவர்கள் பின் கதையைக் காது கொடுத்துக் கேட்டவுடன் இந்த தலைப்பே சரி என சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர்.



படம் குறித்து தயாரிப்பாளர் அஸ்லமிடம் கேட்டபோது,  படத்தை உதயநிதி ஸ்டாலினிடம் காண்பித்தோம், படம் அடித்தட்டு மக்களின் பிரச்சனையைப் பேசுகிறது. இக்காலகட்டத்தில் இது போன்ற படம் அவசியம் எனக் குறிப்பிட்டவர்,  டான்ஸ் மாஸ்டர்  தினேஷ் -க்குள் ஒரு மிகச் சிறந்த நடிகன் ஒளிந்திருப்பதை, தான்  படம் பார்த்தபோது உணர்ந்ததாக மனம் திறந்து பாராட்டினார். அவரே தன்னுடைய நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் 'ஒரு குப்பை கதை' படத்தை வெளியிட சம்மதமும் தெரிவித்துள்ளார்.

மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவிலும், நா.முத்துக்குமார் பாடல் வரிகளிலும், ஜோஸ்வா ஸ்ரீதர் இசையிலும்,  கோபிகிருஷ்ணா எடிட்டிங்கிலும் உருவான
 'ஒரு குப்பை கதை' விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ்  நடித்துள்ளார்.  சுஜோ மேத்யூ, கிரண் ஆர்யன் என்ற இரு புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள். யோகி பாபு,  ஜார்ஜ்  படத்தின் மிக முக்கியமான திருப்பமாக வருகிறார்கள்.  ஆதிரா அம்மாவாக  நடித்துள்ளார்.
Tags:    

Similar News