சினிமா

‘ரங்கூன்’ படத்தின் நாயகி சிம்ரன் இடத்தை பிடிப்பார்: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கை

Published On 2017-05-31 07:59 GMT   |   Update On 2017-05-31 08:02 GMT
ரங்கூன் படத்தின் நாயகி சானா, சிம்ரன் இடத்தை பிடிப்பார் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரங்கூன்’. கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.

இந்த விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது, இயக்குனர் ராஜ்குமார் என்னிடம் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் எனக்காக வந்து என் படங்களுக்கு உதவி செய்பவர். ஒரு முதல்பட இயக்குனரின் படத்தை நான் தான் தயாரிப்பேன் என் இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு நின்றார்கள். அந்த வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது.



சிலர் உதவி இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள், ஒரு சிலர் இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். ராஜ்குமார் இரண்டுக்குமே ரொம்ப கஷ்டப்பட்டார். புதுப்புது இடங்களாக தேடித்தேடி, திரையில் தான் நினைத்ததை கொண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்.

சின்னதிரையில் இருந்து வந்து இயக்குனராகி இருக்கும் ராஜ்குமார் வெற்றி பெற்றால் தான் அவரை போல முயற்சி செய்து வரும் பலருக்கும் நம்பிக்கை வரும். நாயகன் கௌதம் கார்த்திக் படத்துக்காக தன் நிறத்தை மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி நடித்துள்ளார்.



சிம்ரன் முதல் படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன், அதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில் நாயகி சனா, சிம்ரன் விட்டு சென்ற இடத்தை பிடிப்பார் என நம்புகிறேன். நல்ல படங்களை கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இந்த விழாவில் ஃபாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங், நாயகி சனா, படத்தின் இன்னொரு இசையமைப்பாளர் விக்ரம், நடன அமைப்பாளர் சதிஷ், சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவு உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
Tags:    

Similar News