சினிமா

நயன்தாரா படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி

Published On 2017-05-28 07:05 GMT   |   Update On 2017-05-28 07:05 GMT
நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நயன்தாராவும் விஜய் சேதுபதியும் இணைந்து ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் கதாநாயகனாக அதர்வா நடித்து வருகிறார். கதாநாயகியாக ராக்ஷி கண்ணா நடிக்கிறார். ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தில்தான் விஜய் சேதுபதி சுமார் 15 நிமிட காட்சிகள் வரை நடித்துள்ளதாக கூறப்படுகிறது.



இப்படத்தில் பாலிவுட்டில் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News