சினிமா

‘பாகுபலி-2’ உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவுக்கு புதிய அடையாளம்: ஏ.ஆர்.ரகுமான்

Published On 2017-05-22 03:42 GMT   |   Update On 2017-05-22 03:42 GMT
‘பாகுபலி-2’ படம் உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவுக்கு புதிய அடையாளமாக அமைந்துள்ளது என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் இப்படம் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி, சங்கர் போன்ற இந்திய திரையுலகின் ஜாம்பவான்கள் ‘பாகுபலி-2’ படத்தை பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர். குறிப்பாக ரஜினி ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவின் பெருமை என்று பாராட்டியுள்ளது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் இப்படத்தை பார்த்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போதுதான் ‘பாகுபலி-2’ படத்தை சென்னையில் பார்த்தேன். இந்த படம் ரூ.2000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று நம்புகிறேன். ராஜமௌலியும், கீரவாணியும் தென்னிந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் பாராட்டு படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
Tags:    

Similar News