சினிமா

பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்

Published On 2017-04-25 16:28 GMT   |   Update On 2017-04-25 16:28 GMT
இணைந்த கைகள், ஜெகன் மோகனி உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவதுமான என்.கே.விஸ்வநாதன் இன்று காலமானார்.
சென்னை:

தமிழ் திரையுலகில் 1970-களில் ஒளிப்பதிவாளராக பிரவேசித்தவர் என்.கே.விஸ்வநாதன். சட்டம் என் கையில், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாண்டி நாட்டு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஸ்வநாதன், 1990ல் இயக்குனராகவும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார்.


இணைந்த கைகள், நாடோடி பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, ஜெகன் மோகினி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், என்.கே.விஸ்வநாதன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். 

Similar News