சினிமா

விஜய் - அஜித்துடன் டூயட் பாடுவதை கனவாக கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் தங்கை

Published On 2017-04-24 10:04 GMT   |   Update On 2017-04-24 10:04 GMT
விஜய் - அஜித்துடன் டூயட் பாடுவதை கனவாக வைத்திருப்பதாக விஜய் சேதுபதியின் தங்கை கூறியுள்ளார். இதுகுறித்த விரிவாக தகவலை கீழே பார்ப்போம்.
‘தர்மதுரை’, ‘றெக்க’ படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இப்போது ‘திருப்பதிசாமி குடும்பம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

“ ‘திருப்பதிசாமி குடும்பம்’ படத்தில் குடும்ப பாங்கான நாயகியாக நடிக்கிறேன். அடுத்து நான் நடிக்கும் புதிய படத்தில் நாகரீக பெண்ணாக நடிக்கிறேன். முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். சிம்ரன், ஜோதிகா போன்று அழகான கவர்ச்சியில் நடிப்பேன்.



எனது ரோல் மாடல் சமந்தா. அவர் முதல் படத்தில் இருந்தே சவாலான வேடங்களில் நடித்து வருகிறார். எனவே, சமந்தா போன்று ஒரு நடிகையாக வரவேண்டும் என்பது என் ஆசை. எனக்கு பிடித்த ஹீரோ விஜய் தான். அவர் நடந்து வந்தால் ஒரு மாஸாக இருக்கும். அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறேன். அவருடன் கண்டிப்பாக டூயட் பாட வேண்டும். அதுபோல், அஜித், சூர்யாவுடன் டூயட் பாடுவதும் எனது சினிமா கனவு.

விஜய்சேதுபதியின் ‘தர்மதுரை’ படத்தில் தோழியாக நடித்தேன். ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்தேன். ‘கவண்’ படத்தில் அவரது டீமில் ஒருத்தியாக நடித்தேன். அவருடன் நடித்த போது கேமராவை எப்படி பார்க்க வேண்டும், எப்படி நடிக்க வேண்டும், எப்படி வசனம் பேச வேண்டும் என்று கற்றுக் கொடுத் திருக்கிறார். அவரது மனைவியும் என்னை உற்சாகப் படுத்துவார். எனவே, அவரது குடும்பத் துக்கே நான் நன்றிக் கடன்பட்டு இருக்கிறேன். விஜய்சேதுபதி யுடனும் ஜோடி சேர்ந்து நடிக்க முயற்சி செய்து வருகிறேன். அதுவும் விரைவில் கைகூடும் என்று நம்புகிறேன்” என்றார்.

Similar News