சினிமா

‘குயின்’ கன்னட ரீமேக்கை இயக்கும் ரமேஷ் அரவிந்த்

Published On 2017-04-19 08:11 GMT   |   Update On 2017-04-19 08:11 GMT
இந்தியில் அமோக வரவேற்பை பெற்ற ‘குயின்’ படத்தின் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வெளியான படம் 'குயின்'. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

'குயின்' தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்க ஒப்பந்தமானார். இதில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கவிருப்பது உறுதியானது. இந்த நிலையில், இப்படம் எந்தவித காரணமும் இன்றி ஒத்திவைக்கப்பட்டது.



தற்போது ‘குயின்’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தம வில்லன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், கங்கனா ரணாவத் வேடத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகை பரூல் யாதவ் நடிக்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. விரைவில் படத்தின் பூஜை நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Similar News