சினிமா

எனக்கு வெட்கப்பட தெரியாது: ரித்திகா சிங்

Published On 2017-04-15 10:51 GMT   |   Update On 2017-04-15 10:52 GMT
எனக்கு வெட்கம் என்றால் என்ன வென்றே தெரியாது. வெக்கப்படவும் வராது என்று `சிவலிங்கா' படத்தில் நடித்திருந்த ரித்திகா சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
ராகவா லாரன்சுடன் ‘சிவலிங்கா’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி ரித்திகா சிங்கிடம் கேட்ட போது...

“ ‘சிவலிங்கா’ படத்தில் ராகவா லாரன்சுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். என்னால் முடிந்த வரை சிறப்பாக நடித்துள்ளேன். பாடல் காட்சிகளில் கவர்ச்சி தேவைப்பட்டது. எனவே, அதற்கு ஏற்ப உடை அணிந்து ஆடினேன். இந்த படம் என்னை வித்தியாசமாக அடையாளம் காட்டும். எனக்கு நடனம் ஆட தெரியாது. என்றாலும், சமாளித்து ஆடினேன். புடவை அணிந்து ஆடியது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் புடவையில் ஆட வைத்துவிட்டார்கள்.



நான் சிறுவயதில் இருந்தே கராத்தே, பாக்சிங் பயின்றேன். நடனத்துக்கு இன்னும் அதிக பயிற்சி தேவை. ஒரு பாடலுக்கு ஆடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் நடனம் ஆடுவது எளிதான வி‌ஷயம் அல்ல. புடவை கட்டி பழக்கமே இல்லாத எனக்கு புடவை கட்டிவிட்டார்கள். இது இடுப்பில் நிற்காமல் நழுவிக்கொண்டே இருந்தது. எனக்கு வெட்கம் என்றால் என்ன வென்றே தெரியாது. வெக்கப்படவும் வராது. எனக்கு திருமணம் நடக்கும் போது மேடையில் கூட வெக்கப்பட மாட்டேன்.

காதலிக்க எனக்கு நேரம் இல்லை. யாராவது ‘ஐ லவ் யூ’என்று சொன்னால் கூட எனக்கு விருப்பம் இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுவேன்” என்றார்.

Similar News