சினிமா

மலேசியாவில் ‘கபாலி’ படத்தின் 2-ம் பாகம் உருவாவதை காண ஆவலாக இருக்கிறேன்: நஜீப்ரசாக்

Published On 2017-04-02 05:38 GMT   |   Update On 2017-04-02 05:38 GMT
நான் ‘கபாலி’ படத்தின் ரசிகன் என்று கூறிய மலேசிய பிரதமர் நஜீப்ரசாக், ‘கபாலி’ படத்தின் 2-ம் பாகம் மலேசியாவில் எடுக்கப்படுவதை காண காத்திருக்கிறேன் என்று கூறினார்.
நான் ‘கபாலி’ படத்தின் ரசிகன் என்று மலேசிய பிரதமர் நஜீப்ரசாக் கூறினார்.

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படம் மலேசியாவில் படமாக்கப்பட்டது. ‘கபாலி’ படம் அந்நாட்டில் ஏராளமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ‘கபாலி’ படப்பிடிப்புக்கு மலேசிய அரசாங்கம் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த மலேசிய பிரதமர் நஜீப்ரசாக் போயஸ்கார்டன் சென்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். ஒரு சாதாரண ரசிகரைப்போல் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். தனது அழைப்பின் பேரில் அவர் வந்ததாகவும், ‘கபாலி’ படத்துக்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக நன்றி தெரிவித்தேன் என்றும் பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறினார்.



அதன் பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் டெல்லி சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மலாயா மொழியானது ஏராளமான வார்த்தைகளை சமஸ்கிருதத்தில் இருந்து பெற்றுள்ளது. இந்திய உணவு வகைகளையும் நாங்கள் ருசிக்கிறோம்.

நான் தமிழ்ப்படங்களின் ரசிகன். குறிப்பாக ‘கபாலி’ படம் என்னை கவர்ந்தது. அதன் ரசிகன் நான். நான் ‘கபாலி’ படத்தின் 2-ம் பாகம் மலேசியாவில் எடுக்கப்படுவதை காண காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News