சினிமா

'அதி மேதாவிகள்' திரைப்படம்: அரியர்ஸ் மாணவர்களுக்கு சமர்ப்பணம்

Published On 2017-03-31 16:01 GMT   |   Update On 2017-03-31 16:01 GMT
ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் சுரேஷ் ரவி-இஷாரா நாயர் நடிப்பில் உருவாகியுள்ள `அதி மேதாவிகள்' படம் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு சமர்பணம் செய்யப்படுவதாக சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
நட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது அதி மேதாவிகள். அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் இப்படத்தை 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் பிரபல நிகழச்சி தொகுப்பாளர் சுரேஷ் ரவி, 'சதுரங்க வேட்டை' புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது(கோலி சோடா) மற்றும் `மாரி' படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.



இப்படம் குறித்து படத்தின் நாயகன் சுரேஷ் ரவி கூறியதாவது,

"நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எல்லா அரியர்ஸ் மாணவர்களுக்கும் எங்களின் அதி மேதாவிகள் திரைப்படம் ஓர் சமர்ப்பணம் என்று உற்சாகமாக கூறுகிறார் கதாநாயகன் சுரேஷ் ரவி.

"பெற்றோர்களின் வற்புறுத்தலால்  இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிக்க முடியாமல் அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைக்கின்றனர். அதை சரி செய்வதற்கு அவர்கள் என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பது தான் 'அதி மேதாவிகள்' படத்தின் கதை. விரைவில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் கூறுகிறார்.

Similar News