சினிமா

ரஜினியை சந்திக்க இந்தியா வரும் மலேசிய பிரதமர்

Published On 2017-03-30 06:07 GMT   |   Update On 2017-03-30 06:07 GMT
2 நாள் பயணமாக இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புகின்றனர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் 2 நாள் பயணமாக இந்தியா வர இருக்கிறார். மலேசியாவில் இருந்து நேராக  சென்னை வரும் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புகிறார். 

உலகம் முழுக்க ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில்  ரஜினிகாந்துக்கு பயங்கரமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் `கபாலி' படத்தில் ரஜினி மலேசியா டானாக வருவார்.  இதற்காக முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அப்போது மலேசியாவில் அவர் தங்கியிருந்த ஹோட்டல்,  படப்பிடிப்பு நடந்த இடங்கள் என ரசிகர்கள் அவரை சூழ்ந்து இருந்தனர். அது ஒருபுறம் இருக்க மலேசியாவின் பிரமரான நஜீப்  ரஸாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஜினியின் தீவிர ரசிகர்களாம். 



இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வர இருக்கும் ரஸாக், பிரதமர் மோடியை சந்திக்கும் முன், சூப்பர் ஸ்டாரை சந்திக்க  விரும்புகிறாராம். ஆனால், மலேசிய பிரதமருடனான சந்திப்புக்கு குறித்து ரஜினி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்  இன்னும் கிடைக்கவில்லை. 

அதுமட்டுமல்லாமல் மலேசியாவில் உள்ள மலாக்கா நகரின் சுற்றுலாத் தூதராக ரஜினியை நியமிக்க அந்நாட்டு அரசு  பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News