சினிமா

சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருதுகள்: தெறி, இறுதிசுற்று படத்துக்கு 3 விருதுகள்

Published On 2017-03-29 10:10 GMT   |   Update On 2017-03-29 10:10 GMT
சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருது (IIFA) களில் ‘தெறி’, ‘இறுதிசுற்று’ ஆகிய படங்கள் தலா 3 விருதுகளை வாங்கியுள்ளது. மேலும், விருதுகள் பெற்றவர்களின் முழு விவரங்களை கீழே பார்ப்போம்.
சர்வதேச இந்திய சினிமா அகாடமி ஒவ்வொரு வருடமும் தமிழ் மற்றும் இதர மொழிகளில் வெளியாகி சாதனை படைத்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில், இந்த வருடமும் இந்த விருது வழங்கும் விழா நேற்று தொடங்கி இன்று நடைபெற்று முடிந்துள்ளது.



தமிழ் மற்றும் மலையாள சினிமாவுக்காக நடந்த இந்த விழாவில் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’,  மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘இறுதிசுற்று’ ஆகிய படங்கள் தலா மூன்று விருதுகளை வாங்கியுள்ளன. ‘தெறி’ படம் சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லன், சிறந்த இயக்குனர் ஆகிய விருதுகளை வாங்கியுள்ளது. ‘இறுதிசுற்று’ சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளில் விருது பெற்றிருக்கிறது.

மேலும், விருது பெற்றவர்களின் முழு பட்டியல் கீழே:-

சிறந்த நடிகர் - மாதவன் (இறுதிசுற்று)
சிறந்த நடிகை - ரித்திகா சிங் (இறுதிசுற்று)
சிறந்த இயக்குனர் - அட்லி (தெறி)
சிறந்த துணை நடிகர் - நாகர்ஜுனா (தோழ)
சிறந்த துணை நடிகை - பேபி நைனிகா (தெறி)
சிறந்த காமெடியன் - ஆர்.ஜே.பாலாஜி (தேவி)
சிறந்த வில்லன் - மகேந்திரன் (தெறி)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடலாசிரியர் - அருண் ராஜா காமராஜ் (நெருப்புடா - கபாலி)
சிறந்த பின்னணி பாடகர் - அனிருத் (தங்கமே, நீயும் நானும் - நானும் ரவுடிதான்)
சிறந்த பின்னணி பாடகி - நீதி மோகன் (நீயும் நானும் - நானும் ரவுடிதான்)
சிறந்த கதை - கார்த்திக் நரேன் (துருவங்கள் பதினாறு)

Similar News